தன்னுடைய ரசிகர்களை உற்சாகத்துடன் வைத்திருப்பதற்காக நடிகர் விக்ரமிற்கு டிவிட்டர் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக தன்னை டிவிட்டரில் இணைத்துக் கொண்டார். நீண்ட நாள்களாக டிவிட்டரில் இணையாமல் இருந்து வந்த விக்ரம் பொன்னியின் செல்வன், கோப்ரா திரைப்பட வெளியீட்டுக்கு மத்தியில் சமூக வலைத்தளத்தில் இணைந்தார்.
இந்நிலையில் தன்னுடைய ரசிகர்களை நேர்மறையான பதிவுகளின் மூலம் உற்சாகமாக வைத்துக் கொள்வதற்காக டிவிட்டர் நிறுவனம் நடிகர் விக்ரமை பாராட்டியுள்ளது.
இதையும் படிக்க | சர்தார் வசூல் எவ்வளவு?
இதுதொடர்பான வாழ்த்துச் செய்தியில், “நேர்மறையான மற்றும் உத்வேகமளிக்கும் வகையில் உங்களுடைய ரசிகர்களுக்கு நீங்கள் பதிவுகளை வெளியிட்டு வருவதற்கு பாராட்டு தெரிவிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
How terribly tweet of you!! ThanQ! .. from me & my fans!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.