செய்திகள்

மகள் இயக்கும் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த், லைகா நிறுவனம் கொடுத்த புதிய அப்டேட்

DIN

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த இரு படங்களை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க  தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் கைகோர்க்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தினை மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த இரு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் பாகம் 1 திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனம் இயக்க உள்ள இந்த இரண்டு படங்களில் ஒரு படத்திற்கான பூஜை வருகிற நவம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், லைகா நிறுவனம் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2, பொன்னியின் செல்வன் பாகம் 2 மற்றும் இந்தியன் 2 படங்களை தயாரித்து வருகிறது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT