செய்திகள்

இந்த வாரம் காதல் வாரம்!

இந்த வார இறுதியில் மூன்று காதல் படங்கள் வெளியாகவுள்ளன.

DIN

இந்த வார இறுதியில் மூன்று காதல் படங்கள் வெளியாகவுள்ளன.

தீபாவளிக்கு வெளியான இரு படங்களுக்கு அடுத்ததாக இந்த வாரம் மூன்று படங்கள் வெளியாகவுள்ளன. மூன்றுமே காதல் பாடங்களாக அமைந்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. 

லவ் டுடே, காஃபி வித் காதல், நித்தம் ஒரு வானம் என மூன்று படங்கள் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ள இந்த வாரம் நவம்பர் 4 அன்று வெளிவருகின்றன.

சுந்தர்  சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, டிடி, சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைஸா வில்சன், ஐஸ்வர்யா தத்தா போன்றோர் நடித்த படம் காஃபி வித் காதல். இசை - யுவன் சங்கர் ராஜா. அக்டோபர் 7 அன்று வெளிவருவதாக இருந்த இந்தப் படம் இந்த வாரம் வெளியாகிறது. 

கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் - லவ் டுடே. சத்யராஜ், யோகி பாபு, இவானா, ராதிகா, ரவீனா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. தயாரிப்பு - ஏஜிஎஸ் நிறுவனம்.

2020-ல் வெளியான ஓ மை கடவுளே படம் அசோக் செல்வனுக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு அவர் நடிப்பில் பல படங்கள் வெளிவந்துள்ளன. அசோக் செல்வனின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் - நித்தம் ஒரு வானம். அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா நடிப்பில் ரா. கார்த்திக் இயக்கியுள்ளார். வியாகாம் ஸ்டூடியோ, ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - கோபி சுந்தர். 

மூன்று காதல் படங்களில் எந்தப் படத்துக்கு ரசிகர்கள் சம்மதம் தெரிவித்து வெற்றி பெற வைப்பார்கள்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT