செய்திகள்

தள்ளிப்போனது 'பிரேமம்' இயக்குநரின் 'கோல்டு' பட வெளியீடு - என்ன காரணம் ?

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பிரித்விராஜ் நயன்தாரா நடித்துள்ள கோல்டு திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

DIN

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பிரித்விராஜ் நயன்தாரா நடித்துள்ள கோல்டு திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் நடித்த பிரேமம் திரைப்படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. தமிழ்நாட்டிலும் வெற்றிகரமாக இந்தப் படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது. 

நீண்ட இடைவேளைக்கு பிறகு கோல்டு என்ற படத்தை அல்போன்ஸ் புத்ரன் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் பிரித்விராஜ், நயன்தாரா இருவரும் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். முதலில் இந்தப் படம் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், ''இன்னும் வேலைகள் முடிவடையாததால் கோல்டு ஒனம் பண்டிக்கைக்கு அடுத்த வாரம் வெளியாகிறது. தயவுசெய்து எங்களை மன்னித்துவிடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிண்டன் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

சாலையோர வியாபார குழுக்களுக்கு அரசு ஒப்புதல்: நவம்பருக்குள் கூட்டம் நடத்த அறிவுரை!

ஆசிரியா் தகுதித்தோ்வு எழுத வந்தவரின் தோ்வுக்கூட அனுமதி சீட்டில் குளறுபடி: போலீஸாா் விசாரணை

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான தோ்வு: 93 சதவீதம் போ் பங்கேற்பு!

அதிக மழைநீா்த் தேங்கும் இடங்களை கண்காணிக்க நடவடிக்கை!

SCROLL FOR NEXT