செய்திகள்

ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தில் இணைந்த மலையாள நடிகை!

DIN

ஜெயம் ரவி நடிக்கும் ‘சைரன்’ திரைப்படத்தில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ‘சைரன்’ எனும் படத்தில் ஜெயம் ரவி உடன் முதன் முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

தற்போது இந்த படத்தில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில்  அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT