செய்திகள்

'இதுதான் எங்க அண்ணன்' - சூர்யா குறித்து கார்த்தி நெகிழ்ச்சி

தனது அண்ணன் சூர்யா திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள நிலையில் கார்த்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

தனது அண்ணன் சூர்யா திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள நிலையில் கார்த்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடிகர் சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளாகிறது. இதனையடுத்து சூர்யா ஹீரோவாக அறிமுகமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 

இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவுடனான சிறிய வயது புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ''அவர் இரவு, பகல் பாராமல் உழைத்து அவருடைய குறைகளை நிறைகளாக மாற்றியிருக்கிறார்.

சிறந்த சாதனைகளை முறியடிக்க மட்டுமே கவனம் செலுத்துகிறார். ஒரு மனிதராக பெரிய மனதுடன் நிறைய குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளார். அதுதான் என் அண்ணன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் கார்த்தியின் பதிவு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா நடிப்பில் கார்த்தி நடித்த 'விருமன்' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மணிரத்னம் இயக்கத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள பொன்னியின் செல்வன் வருகிற 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT