உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சன் டிவி தொகுப்பாளர் திமுகவில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
சன் டிவியின் பிரபல தொகுப்பாளர் அசார் வணக்கம் தமிழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார். பிரபலங்களுடனான அவரது உரையாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துவருகிறது.
சித்தி 2 உள்ளிட்ட சில சின்னத்திரை தொடர்களிலும் அசார் நடித்துள்ளார். தற்போது நடிகர் சசிகுமாரின் காமன்மேன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
இதையும் படிக்க | 'வேட்டைக்கு தயாரா ?' - கமலின் பிக்பாஸ் ப்ரமோ விடியோ வெளியானது
இந்த நிலையில் அசார் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் சின்னவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.