செய்திகள்

தன் வீட்டு பணியாளரின் மகன் திருமணத்தை முன் நின்று நடத்திய விக்ரம்: ரசிகர்கள் நெகிழ்ச்சி

நடிகர் விக்ரம் தனது வீட்டில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துவருபரின் மகன் திருமணத்தை முன் நின்று நடத்தியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

நடிகர் விக்ரம் தனது வீட்டில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துவருபரின் மகன் திருமணத்தை முன் நின்று நடத்தியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

இதனையடுத்து விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. பொன்னியின் செல்வன் டிரெய்லர்  வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது. 

மேலும் பா.ரஞ்சித் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் விரைவில் விக்ரம் கலந்துகொள்ளவிருக்கிறார். அதற்கான முன்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன. 

இந்த நிலையில் தனது வீட்டில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் மேரி என்பவருடைய மகன் தீபக் மற்றும் வர்ஷினியின் திருமணத்தை நடிகர் விக்ரம் முன் நின்று நடத்தியுள்ளார். பின்னர் மணமக்களுக்கு தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்தார். நடிகர் விக்ரமின் செயல் அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷாலின் மகுடம் போஸ்டர்!

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

ஹைதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை!

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

SCROLL FOR NEXT