ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் தனது குட்டி ரசிகையுடன் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். ஜெயிலர் படப்பிடிப்பு கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் துவங்கியது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெய், தமன்னா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | தன் வீட்டு பணியாளரின் மகன் திருணமத்தை முன் நின்று நடத்திய விக்ரம்: ரசிகர்கள் நெகிழ்ச்சி
அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் தனது குட்டி ரசிகையுடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயரிட்டுள்ளதாக சௌந்தர்யா அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.