செய்திகள்

ட்விட்டரில் தனது பெயரை 'குந்தவை' என மாற்றியுள்ளார் நடிகை த்ரிஷா!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வரும் கதாபாத்திரப் பெயரை தனது ட்விட்டரில் பக்கத்தில்  'குந்தவை' என பெயர் மாற்றியுள்ளார் நடிகை திரிஷா.

DIN

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வரும் கதாபாத்திரப் பெயரை தனது ட்விட்டரில் பக்கத்தில்  'குந்தவை' என பெயர் மாற்றியுள்ளார் நடிகை திரிஷா.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற செப்.30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். அதன்  ஒரு பகுதியாக பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  

இந்த நிலையில் இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் வசனத்தைப் பகிர்ந்திருந்தார். தற்போது நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘குந்தவை’ என பெயர் மாற்றியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதந்திர தினம்: தஞ்சை பெரிய கோயிலில் தீவிர சோதனை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம்! மணப்பெண் யார்!

விஜயகாந்த் கட்டிய மேம்பாலத்தில் விழுந்து வணங்கிய பிரேமலதா

SCROLL FOR NEXT