செய்திகள்

ரூ.75-க்கு சினிமா டிக்கெட்: தேதியை மாற்றியது மல்டிபிளக்ஸ் கூட்டமைப்பு

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.75 -க்கு டிக்கெட் விற்கப்பட இருந்த தேசிய சினிமா தினத்தின் தேதியை மாற்ற உள்ளதாக மல்டிபிளக்ஸ் கூட்டமைப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.75 -க்கு டிக்கெட் விற்கப்பட இருந்த தேசிய சினிமா தினத்தின் தேதியை மாற்ற உள்ளதாக மல்டிபிளக்ஸ் கூட்டமைப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி தேசிய மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் தேசிய சினிமா தினமான செப்டம்பர் 16-ல் மட்டும் அனைத்து வகையான இருக்கைகளுக்கும் டிக்கெட் விலை ரூ.75 என அறிவித்திருந்ததது.

அந்த நாளில் மட்டும் நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளில் டிக்கெட் கட்டணமாக ரூ. 75 மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இந்த முன்னெடுப்பில் பங்கேற்கின்றன எனத்  தெரிவித்திருந்தனர்.

சாதாரண திரையரங்க உரிமையாளர்கள் இந்தச் சலுகையை வழங்க முன்வரவில்லை.

இந்நிலையில், செப்.16 அன்று அறிவிக்கப்பட்டிருந்த ரூ.75-க்கு டிக்கெட் சலுகையை செப்.23 ஆம் தேதிக்கு மாற்றம் செய்துள்ளதாக மல்டிபிளக்ஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் கடந்த வாரம் வெளியான பிரம்மாஸ்திரம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாலும்  ’வெந்து தணிந்தது காடு’ வருகிற வியாழக்கிழமை வெளியாவதாலும் புதிய படங்களின் வசூலில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்தத் தேதி மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈவெரா சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு பாமகவினா் அஞ்சலி

திருவிடைமருதூரில் 81.2 மி.மீ. மழை

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT