வாரிசு படப்பிடிப்பில் விஜய் உடன் ராஷ்மிகா: புகைப்படம்
‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் உடன் ராஷ்மிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் உடன் ராஷ்மிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார்.
விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஷாம், சரத்குமார், குஷ்பு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைப்பில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
இதையும் படிக்க: ‘படம் பார்ப்பதற்கு முன்...’ ரசிகர்களுக்கு கௌதம் மேனன் கோரிக்கை
இந்நிலையில், வேகமாக நடைபெற்று வரும் படப்பிடிப்பிற்கு இடையே நாயகி ராஷ்மிகா நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை வெளியிட்டுள்ளார்.
தற்போது, அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், ’வாரிசு’ திரைப்படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமம் ஆகியவை ரூ.180 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.