ரன்வீர் சிங் 
செய்திகள்

யாரோ ’மார்பிங்' செய்துவிட்டார்கள்: நிர்வாணப் புகைப்பட வழக்கில் ரன்வீர் சிங் விளக்கம்

நிர்வாணப் படங்களைப் பகிர்ந்த வழக்கில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

DIN

நிர்வாணப் படங்களைப் பகிர்ந்த வழக்கில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த மாதம் நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாணமாக இருக்கும் படங்களைப் பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது.

அதனைத் தொடந்து, நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்த புகாரின் அடிப்படையில் நடிகர் ரன்வீர் சிங்கின் மீது மும்பை செம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ரன்வீர் சிங் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என மும்பை காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்த ரன்வீர் சிங் தான் பதிவிட்ட புகைப்படங்களில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து அதை யாரோ  நிர்வாணமாக ’மார்பிங்' முறையில் சித்தரித்து இணையத்தில் பதிவிட்டதாக புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.

வழக்கு விசாரணை மேலும் நடைபெறும் என்பதால் இதன் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT