செய்திகள்

’ஜவான்’ படத்திற்காக 200 பெண்களுடன் மோதிய ஷாருக்கான்!

ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுடன் 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டையிட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது. 

DIN

ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுடன் 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டையிட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது. 

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தற்போது, இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத் தீவிரமாக சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் படமாக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ’ஜவான்’ கிளைமேக்ஸ் சண்டைகாக நடிகர் ஷாருக்கான்  பெண்களுடன் சண்டையிடும் காட்சி எடுக்கப்பட்டதாகவும் அதில் 200-க்கும் அதிகமான பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் மும்பையிலிருந்து சென்னை வந்து கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசை - அனிருத்.

மேலும், நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர்ந்து கொட்டிய மழை! தண்ணீரில் மிதந்து சென்ற கார்! | Rain | Chennai

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 10 லட்சம் டாலர் வழங்கிய சீனா!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு!

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராஜிநாமா!

அங்கம்மாள் டிரெய்லர்!

SCROLL FOR NEXT