செய்திகள்

'கேப்டன் மில்லர்': தனுஷுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

'ராக்கி', 'சாணிக் காயிதம்' படங்களின் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

1930களின் பின்னணியில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தல் சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்த நிலையில் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 'டாக்டர்', 'டான்', 'எதற்கும் துணிந்தவன்' படங்களின் நாயகி பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுப் புட்டிகளை விற்ற பெண் கைது

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

நொய்டா: எஸ்ஐஆா் பணிகளில் அலட்சியம்! 60 பிஎல்ஓ, 7 கண்காணிப்பு அதிகாரிகள் மீது வழக்கு

SCROLL FOR NEXT