முகப்பு
செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் பழம்பெரும் நடிகையை நேரில் சந்தித்த அமைச்சர் - என்ன ஆனது?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழம்பெரும் நடிகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:22 AM
பகிர்:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழம்பெரும் நடிகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

தமிழில் ரிக்ஷாக்காரன், காசேதான் கடவுளடா போன்ற பல படங்களில் நடித்தவர் ஜெயக்குமாரி. இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்லார். 

தற்போது 72 வயதாகும் ஜெயக்குமாரி சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல்  சிகிச்சைக்கு அவரிடம் போதிய பணமில்லை என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நடிகை ஜெயக்குமாரியை நேரில் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மருத்துவர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →