செய்திகள்

‘மேனன்... படிச்சி வாங்குன பட்டமா?’- பதிலடி கொடுத்த ப்ளு சட்டை மாறன்!

வெந்து தணிந்தது காடு படத்தின் இயக்குநர் மீது திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

வெந்து தணிந்தது காடு படத்தின் இயக்குநர் மீது திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படம் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. படம் மெதுவாக நகர்வதாக ஒரு சிலர் கருத்து கூறி வருகின்றனர். 

அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் 'வெந்து தணிந்தது காடு' படத்தைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில்  செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கௌதம் மேனன் ப்ளூ சட்டை மாறன் மீதான தனது கோபத்தைப் பதிவுசெய்துள்ளார். “அவர் மீது இறங்கி எதாவது செய்யலாமா என்ற அளவுக்கு கோபம் வருது'' என கூறியது வைரலானது. 

தற்போது இதற்கு பதிலடியாக ப்ளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மேனன் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலைப் பொருள்களை கடத்திய இருவா் கைது!

7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி.க்கு எதிராக டி20 தொடரை வென்று பாகிஸ்தான் அபாரம்!

சென்னையில் ஓமந்தூர் ராமசாமிக்கு சிலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அலையும் அழகும்... இலங்கையில் ஆண்ட்ரியா!

மும்பை: புறநகர் ரயிலில் இருந்து விழுந்து 3 பயணிகள் காயம்

SCROLL FOR NEXT