செய்திகள்

விஜய்யின் 'தளபதி 67'-ல் நடிக்கிறீர்களா? - திரிஷாவின் பதில் இதுதான்

DIN

விஜய்யின் தளபதி 67 படம் குறித்து நடிகை திரிஷா பேசும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குந்தவையாக நடித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பாக நடிகை திரிஷா படக்குழுவினருடன் பேட்டியளித்துவருகிறார். 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தொகுப்பாளர், 'நீங்கள் தளபதி 67 படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளதே?' என திரிஷாவிடம் கேட்டார். அதற்கு திரிஷா, இப்பொழுது என்னிடம் பொன்னியின் செல்வன் படம் குறித்து மட்டுமே பேச சொல்லியிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்.

இதனையடுத்து திரிஷா தளபதி 67  படத்தில் நடிப்பதை மறுக்கவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகமடைந்துள்ளனர். 

கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி ஆகிய 4 படங்களில் விஜய் - திரிஷா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இதில் கில்லி, திருப்பாச்சி ஆகிய படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்த வரிசையில் தளபதி 67 இடம்பெறுமா என்பது விரைவில் தெரிந்துவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT