செய்திகள்

இந்த குட்டி பொண்ணு சமீபத்தில் ஹிட்டான படத்தின் நாயகி - யாரென்று தெரிகிறதா?

குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள படத்தின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

DIN

தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பதிவுசெய்தது. இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

'திருச்சிற்றம்பலம்' படத்தில் ஷோபனா  என்ற வேடத்தில் கலக்கினார் நித்யா மேனன். 'ஷோபனா மாதிரி நமக்கு ஒரு தோழி இல்லையே' என இளைஞர்களை ஏங்க வைத்தது அவரது நடிப்பு. 

நடிகை நித்யா மேனன் குழந்தை நட்சத்திரமாக ஹனுமான் என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை தபுவுடன் அவர் நடித்துள்ள காட்சிகளை விடியோவாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த விடியோவை பார்த்த பலருக்கும் 'உண்மையில் இது நித்யா மேனனா' என ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழில் 'வெப்பம்' படத்தின் மூலம் நித்யா மேனன் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தின் மழை வரும் அறிகுறி பாடலையும், நித்யா மேனன் தனது பெரிய கண்களால் கொடுக்கும் ரியாக்சன்களையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மேலும் 'மெர்சல்', 'ஓகே கண்மணி' போன்ற சில படங்களில் நித்யா மேனன் நடித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிபதி மீது காலணி வீசி கடவுள்தான் என்னைத் தூண்டினார்! - வழக்குரைஞர் Rakesh Kishore | B.R. Gavai

ஆரஞ்ச் அலர்ட்.... சங்கீதா!

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 16 மாவோயிஸ்டுகள் சரண்!

மீண்டும் போர் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த முடிவை அடைவோம்: பாகிஸ்தான்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.80 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT