செய்திகள்

இன்று வெளியாகிறது நடிகர் அஜித்தின் 'ஏகே 61' முதல் பார்வை: தலைப்பு இதுவா?

நடிகர் அஜித் நடிப்பில் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் அஜித் நடிப்பில் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அஜித்தின் ஏகே 61 படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் இன்று (செப்டம்பர் 21) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. 

இந்தப் படத்துக்கு துணிவு அல்லது துணிவே துணை எனப் பெயரிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிவருகிறது. இதனையடுத்து ஏகே 61 மற்றும் துணிவு போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகிவருகின்றன. 

தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத் கூட்டணி இந்தப் படத்தின் மூலம் 3வது முறையாக இணைந்துள்ளனர். முதல் இரண்டு படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் ஏகே 61 படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். வலிமை படத்தின் போது யுவனுக்கும் இயக்குநர் வினோத்துக்கும் இடையே உருவான கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த மாற்றம் என்று கூறப்படுகிறது. 

இந்தப் படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். ஏகே 61 படத்தின் வெளியீட்டுத் தேதியும் இன்று அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT