துணிவு படத்தின் முதல் பார்வை போஸ்டர் 
செய்திகள்

அஜித்குமார் நடிக்கும் படத்தின் பெயர் 'துணிவு'

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

DIN

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு 'துணிவு' என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு இன்று மாலை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து துணிவு என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாக 'துணிவு' உள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு 'துணிவு' எனப் பெரிடப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்த நிலையில், துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இவர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான 'தீரன் அதிகாரம்' ஒன்று படத்திற்கு இசையமைத்தவர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, மிலன் படத்தொகுப்பு செய்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT