நடிகர்கள் கதிர் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்துள்ள ஆசை திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் புதன்கிழமை வெளியானது.
மதயானைக் கூட்டம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பு பெற்றவர் நடிகர் கதிர். இவர் பேச்சிலர் படத்தில் கதாநாயகியாக நடித்த திவ்யபாரதியுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஆசை.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் புதன்கிழமை வெளியிட்டனர்.
ஈகில் ஐ புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஷிவ் மோஹா இயக்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.