நடிகர் அஜித் நடிக்கும் துணிவு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு 'துணிவு' என பெயரிடப்பட்டு முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் நேற்று மாலை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து துணிவு என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இரண்டாவது போஸ்டரை இன்று வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாக 'துணிவு' உள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக 'துணிவு' உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்த நிலையில், துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இவர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான 'தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு இசையமைத்தவர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, மிலன் படத்தொகுப்பு செய்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.