செய்திகள்

குந்தவையுடன் நந்தினி எடுத்த செல்பி!

வைவரலாகிக் கொண்டிருக்கிறது குந்தவையுடன் நந்தினி எடுத்த தற்படம்!

DIN

வைவரலாகிக் கொண்டிருக்கிறது குந்தவையுடன் நந்தினி எடுத்த தற்படம்!

திரைப்படமான கல்கியின் பிரமாண்ட நாவலான பொன்னியின் செல்வன் வெளியீட்டையொட்டி சமூக ஊடகங்களில் நிறைய செய்திகள் பரவிவருகின்றன.

பொன்னியின் செல்வன்-1 ப்ரமோஷனுக்காக இந்தப் படத்தில் நடித்த நடிகர்களும் நடிகைகளும் பேட்டியளிப்பதில் தொடங்கி என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள்.

படத்தில் மிக முக்கியமான பாத்திரமான குந்தவையாக நடிக்கும் த்ரிஷாவுக்கு  இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் இன்னொரு சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கலாம்.

இந்த நிலையில் தன்னுடைய டிவிட்டர் பெயரையே குந்தவை என்று மாற்றினார் த்ரிஷா. இவரைத் தொடர்ந்து, திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்கும் நடிகர் விக்ரம் போன்றவர்களும் தங்கள் ட்விட்டர் பெயர்களை மாற்றிக் கொண்டனர்.

இப்போது வித்தியாசமாக ஒரு தற்படத்தை (செல்பியை) டிவிட்டரில் ஏற்றியிருக்கிறார் நடிகை த்ரிஷா - படத்தில் குந்தவை த்ரிஷாவுடன் இணைந்து  நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் படமெடுத்துக் கொண்டிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் - 1 திரைப்படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT