சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் போண்டாமணிக்கு நடிகர் தனுஷ் உதவி செய்துள்ளார்.
நடிகர் வடிவேலு, விவேக் அவர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் போண்டாமணி. சிறுநீரக பாதிப்பால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் போண்டாமணிக்கு நடிகர் தனுஷ் ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். இதனை வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார் போண்டாமணி.
இதற்கு முன்னதாக நடிகர் விஜய் சேதுபதியும் ரூ.1 லட்சம் உதவி செய்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.