செய்திகள்

வெந்து தணிந்தது காடு வெற்றி: கமல் பாணியை பின்பற்றிய ஐசரி கணேஷ்

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கமல்ஹாசன் பாணியில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். 

DIN

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கமல்ஹாசன் பாணியில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் வசூலில் குறைவைக்கவில்லை. படம் வெளியான முதல் நான்கு நாள்களிலேயே ரூ.50 கோடிகளுக்கு மேலாக வசூலித்ததாக தகவல் வெளியானது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.

ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார். இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு ரூ.92 லட்சம் மதிப்புள்ள காரையும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கையும் பரிசளித்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

முன்னதாக விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோருக்கு நடிகர் கமல்ஹாசன் பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார். தற்போது அதே பாணியில் தன்னுடைய படத்தின் வெற்றியையும் ஐசரி கணேஷ் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

அம்மன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 20 போ் காயம்

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

SCROLL FOR NEXT