செய்திகள்

அனிருத் தாத்தாவும் இயக்குநருமான எஸ். வி. ரமணன் காலமானார்

இயக்குநரும் வானொளி விளம்பரங்கள் மூலம் புகழ்பெற்றவருமான எஸ்.வி. ரமணன் இன்று காலமானார். 

DIN

இயக்குநரும் வானொலி விளம்பரங்கள் மூலம் புகழ்பெற்றவருமான எஸ்.வி. ரமணன் இன்று காலமானார். அவருக்கு வயது 87. 

1930களிலும் 40களிலும் தமிழ்ப் படங்களை இயக்கிப் புகழ்பெற்ற இயக்குநர்  கே. சுப்ரமணியத்தின் இரண்டாவது மகனான எஸ்.வி. ரமணன், நாடகக் கலைஞராகத் தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார்.

‘Silver Tongue Broadcaster’ என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்பட்ட எஸ்.வி. ரமணன், தென்னிந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சித் துறையின் மூத்த ஜாம்பவானாக மதிக்கப்பட்டார். ஜெய்ஸ்ரீ பிக்சர்ஸ் என்கிற நிறுவனத்தை நிறுவியதுடன், அதன் மூலம் குறும்படங்கள் மற்றும் தொடர்கள் தவிர, ஆயிரக்கணக்கான வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களைத் தயாரித்தார். அவரது எடுப்பான குரல் வளம் மற்றும் தனித்துவமான திரைக்கதை பாணி மிகப்பெரிய அளவிலான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அவரது படைப்பாற்றலால் பல பிராண்டுகள் உருவாக்கப்பட்டன. மரியாதைக்குரிய ஆளுமையாக பார்க்கப்பட்ட அவர் இத்துறையில் பலருக்கு வழிகாட்டியாக இருந்தார். 

1983-ல் ஒய்.ஜி. மகேந்திரன், சுஹாசினி நடித்த உருவங்கள் மாறலாம் என்கிற படத்தை இயக்கினார். மேலும் அதன் கதையையும் எழுதி இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய பிரபலங்கள் கெளரவ வேடங்களில் நடித்தார்கள். எஸ்.வி. ரமணனுக்கு பாமா ரமணன் என்ற மனைவியும் லட்சுமி, சரஸ்வதி என இரு மகள்களும் உள்ளனர். ரமணனின் மகள் லட்சுமியின் மகன்தான் பிரபல இசையமைப்பாளரான அனிருத். 

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார் எஸ்.வி. ரமணன். அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

பைக் மீது காா் மோதி விபத்து: நடத்துநா் உயிரிழப்பு

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் வெற்றி

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை தடகளப் போட்டிகள்! 300 மாணவா்கள் பங்கேற்பு!

பணம் வைத்து சூதாட்டம்: 6 போ் கைது

SCROLL FOR NEXT