முகப்பு
செய்திகள்

ரூ.1,500 கோடியில் உருவான ‘தி கிரே மேன்’ படத்தின் தனுஷ் தோற்றம் வெளியீடு

‘தி கிரே மேன்’ ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் தனுஷின் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:05 AM
பகிர்:

‘தி கிரே மேன்’ ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் தனுஷின் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’, ‘கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் புதிய திரைப்படம் ‘தி கிரே மேன்’ .

ரூ.1,500 கோடி செலவில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், அப்படத்தில் நடித்துள்ள நடிகர் தனுஷின் தோற்றப் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆக்சன் பாணியில் உருவாகும் இத்திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் 3 மாதம் அமெரிக்காவில் தங்கி நடித்துக் கொடுத்திருந்தார்.

முன்னதாக, இப்படத்தில் நடித்த முக்கிய நடிகர்களின் போஸ்டர்கள் வெளியானது. தற்போது, தனுஷின் புகைப்படமும் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதனைப் பகிர்ந்து வருகிறார்கள்.

 ‘தி கிரே மேன்’ திரைப்படம் வருகிற ஜுலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →