முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயன், அதிதி நடிக்கும் மாவீரன்: படப்பிடிப்பு தொடக்கம் (படங்கள்)

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் ரூ. 100 கோடி வசூலை எட்டிய நிலையில் அவர் அடுத்து நடிக்கும் மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். 

மாவீரன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் பிரபல இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டார். இப்படத்தை அருண் விஸ்வா தயாரிக்கிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →