அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய 'நாய் சேகர்' பாடல் இதோ
நாய் சேகர் படத்திலிருந்து அனிருத் இசையில் எடக்கு மொடக்கு என்ற பாடல் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகர் சதிஷ் நாயகனாக நடித்திருந்த நாய் சேகர் படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. பிகில் படத்துக்கு பிறகு ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.
இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கி, நடிகர் சதிஷின் நண்பராகவும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சதிஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா லக்ஷ்மி நடித்திருந்தார். மேலும், ஞானசம்பந்தம், மரியம் ஜார்ஜ், இளவரசு, சங்கர் கணேஷ், லொள்ளு சபா மாறன், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இதையும் படிக்க | விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' டீசர் குறித்த தகவல்
Advertisement
இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் அனிருத் இசையமைத்திருந்தார். மற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அஜிஸ் மேற்கொண்டார். இந்த நிலையில் அனிருத் இசையமைத்து, சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும் எடக்கு மொடக்கு பாடலின் விடியோ தற்போது வெளியாகியுள்ளது.