முகப்பு
செய்திகள்

யூடியூப் பிரபலம் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள 'டி பிளாக்' டிரெய்லர் இதோ

எருமசாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டி பிளாக் டிரெய்லர் வெளியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

யூடியூபில் எருமசாணி சேனல் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் விஜய். இவர் இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்துள்ள டி பிளாக்  படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக அவந்திகா நடிக்க, கரு பழனியப்பன், சரண்தீப், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, உமா ரியாஷ், விஜய் குமார் ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்னர். இந்தப் படத்துக்கு ரோன் எதன் யோஹனன் இசையமைத்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்து இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வழக்கமான அருள்நிதி படங்களைப் போன்று இந்தப் படமும் ஹாரர் திரில்லர் என்ற வகைப் படமாக உருவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.