முகப்பு
செய்திகள்

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ பாடல் வெளியீடு

நடிகர் துல்கர்சல்மான் நடித்துள்ள ’ஹே சினாமிகா’ திரைப்படத்தின் ’தோழி’ பாடல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2022 at 9:33 PM
துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ பாடல் வெளியீடு
பகிர்:

நடிகர் துல்கர்சல்மான் நடித்துள்ள ’ஹே சினாமிகா’ திரைப்படத்தின் ’தோழி’ பாடல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்கு பிறகு துல்கர் சல்மான் தமிழில் நடித்துள்ள படம் 'ஹே சினாமிகா'. இந்தப் படத்தை பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தில்  துல்கர் சல்மான் பாடியுள்ள அச்சமில்லை என்ற பாடல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது பாடகர் பிரதீப் குமார் பாடிய தோழி எனும் பாடல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்தப் பாடலை கார்கி எழுதியுள்ளார். நக்சத்திரா நாகேஷ், மிர்ச்சி விஜய், கௌசிக், அபிசேக் குமார், பிரதீப் விஜயன், கோதண்ட ராமன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.