முகப்பு
செய்திகள்

கேஜிஎஃப் நடிகர் காலமானார்: ரசிகர்கள் இரங்கல்

மக்களே ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம் நானும் நீயும் ஒத்துக்கிட்டுதானே ஆகணும்...

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
படம் - twitter.com/hombalefilm
பகிர்:

கேஜிஎஃப் படத்தில் நடித்த மோகன் ஜுனேஜா காலமானார். அவருக்கு வயது 54. 

சங்கர் நாக் நடித்த வால் போஸ்டர் படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமானவர் மோகன் ஜுனேஜா. கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் மேடை நாடகங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

கேஜிஎஃப் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். போலீஸ் விசிசலடிச்சு துரத்தின ரெளடி, ஜனங்க விசிலடிச்சு கொண்டாடுற ராஜாவா மாறுனான், மக்களே ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம் நானும் நீயும் ஒத்துக்கிட்டுதானே ஆகணும் என்று வசனம் பேசி ரசிகர்களிடம் கவனம் பெற்றார். 

இந்நிலையில் உடல்நலக்குறைவால் பெங்களூரில்  மோகன் ஜுனேஜா காலமானார்.

மோகன் ஜுனேஜாவின் மறைவுக்கு கேஜிஎஃப் படக்குழுவினரும் திரையுலகப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.