தம்பி ராமையா மகன் இயக்குநராக அறிமுகம்: படத்தின் போஸ்டர் வெளியானது!
தம்பி ராமையாவின் மகன் - சமுத்திரக்கனி கூட்டணியில் உருவாகும் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
தம்பி ராமையாவின் மகன் - சமுத்திரக்கனி கூட்டணியில் உருவாகும் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
மனு நீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது மகன் உமாபதியை நாயகனாக வைத்து மணியார் குடும்பம் என்ற படத்தை இயக்கினார்.
ராஜாகிளி படத்தில் சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் நடிக்கிறார். அவருடன் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஆடுகளம் நரேன், பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கும் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் தம்பி ராமைய்யா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்தும் நடித்தும் இருக்கிறார். ஆரம்பத்தில் தம்பி ராமையா இயக்கவிருந்த இந்தப் படத்தினை அவரது மகன் உமாபதி இயக்கி உள்ளார்.
தற்போது ராஜாகிளி படத்தின் புதிய இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
Related Article
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி?
தொட்டதெல்லாம் ஹிட்...சம்பளத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய அனிருத்!
இளையராஜா இசையில் கவர்ச்சியில் மிளிரும் ஷிவானி: வைரல் விடியோ!
இரு மொழிகளிலும் தனுஷ் பாடும் பாடல் (விடியோ)
‘ரஞ்சிதமே பாட்டுக்கு தியேட்டர்ல யாருமே உட்கார மாட்டீங்க...’ - தமன் நெகிழ்ச்சி ட்வீட்