முகப்பு
செய்திகள்

பிரதமர் மோடியின் விடியோவைப் பகிர்ந்து தமிழில் பதிவிட்ட ரஹ்மான்

பிரதமர் நரேந்திர மோடியின் வந்தே மாதரம் விடியோ பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடியின் வந்தே மாதரம் விடியோ பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டும் கார்கில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். 

அப்போது வீரர்கள் அவருக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த வந்தே மாதரம் பாடலை பாடினர். அதை பிரதமர் மிகவும் ரசித்துக்கேட்டார். அப்போது எடுக்கப்பட்ட விடியோவை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதனைப் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்,

''இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல் பாசம் இல்லை
ஆதலால் உன் மடி தேடினேன்
தாய் மண்ணே வணக்கம்'
' என வந்தே மாதரம் பாடலின் தமிழ் வரிகளைப் பகிர்ந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.