முகப்பு
செய்திகள்

விமர்சனங்கள் காரணமாக 'கோப்ரா' படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கம்

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலிருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 செப்டம்பர், 2022 at 12:48 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:42 PM

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் நேற்று(ஆகஸட் 31) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. 

கோப்ரா படத்தின் கால அளவு 3 மணி நேரம் 3 விநாடி 3 நொடிகளாக இருந்தது. இந்த நிலையில் இந்தப் படம் மிக நீளமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து படத்தை சுவாரசியப்படுத்தும் நோக்கில் 20 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. 

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து 20 நிமிடங்கள் குறைத்துள்ளதாகவும் இன்று(செப்டம்பர் 1) மாலையிலிருந்து 20 நிமிடங்கள் குறைக்கப்பட்ட கோப்ரா படம் ஒளிபரப்பாகும் என்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.  

Advertisement

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்டுள்ளார். 

கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி விஜய்க்கு ஜோடியாக நடிக்க, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.