முகப்பு
செய்திகள்

100 நாள் வெற்றியில் விக்ரம் திரைப்படம்

நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் 100ஆவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் 100ஆவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூல் சாதனையைப் படைத்தது. அதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியானாலும் இன்னும் சில திரையரங்குகளில் விக்ரம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. இந்தப் படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் விக்ரம் திரைப்படம் 100ஆவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. 100ஆவது நாள் வெற்றியைக் கொண்டாடும் விதமாக புதிய போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, சூர்யா, பகத் பாசில், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments