முகப்பு
செய்திகள்

சம்பளத்தை உயர்த்திய கமல்ஹாசன்..

நடிகர் கமல்ஹாசன் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

நடிகர் கமல்ஹாசன் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘விக்ரம்’ திரைப்படம் ரூ.400 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையைப் படைத்தது. இதுவரையிலான கமல் படங்களிலேயே அதிக புகழையும் வணிகத்தையும் பெற்றுத்தந்தது ‘விக்ரம்’ தான்.

இந்நிலையில், அப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்ததாக நடித்துக்கொண்டிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் அவருடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, 3 ஆண்டுகளுக்கு முன் ‘இந்தியன் 2’-க்கு ஒப்பந்தமானபோது ரூ.35 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் தற்போது அவர் ரூ.70 கோடி கேட்டுள்ளதாகவும் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.