முகப்பு
செய்திகள்

‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு முடிந்தது! 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. 

Updated On : 24 ஏப்ரல், 2023 at 7:19 PM
பகிர்:

‘திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. சிம்பு சரியாக ஒத்துழைக்காததால்தான் இந்தப் படம் தோல்வியைடந்ததாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் குற்றம்சாட்டியது அனைவரும் அறிந்ததே. 

‘மார்க் ஆண்டனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துவருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

வேகமாக நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பு தற்போது எஸ்.ஜே.சூர்யாவின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விடியோவை வெளியிட்டு படக்குழு இதை அறிவிப்பு செய்துள்ளனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.