செய்திகள்

செவ்வந்தி சீரியலில் நுழையும் சந்திரலேகா தொடர் நடிகை

செவ்வந்தி சீரியலில் சந்திரலேகா தொடர் நடிகை நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

செவ்வந்தி சீரியலில் சந்திரலேகா தொடர் நடிகை நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி தொடரான 'செவ்வந்தி' சீரியல் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. பார்வையாளர்களை  மேலும் அதிகரிக்க, தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர். 

இந்த நிலையில் செவ்வந்தி சீரியலில் சந்திரலேகா தொடர் புகழ் சந்தியா ஜாகர்லமுடி விரைவில் இணையவுள்ளார். இத்தொடரில் சந்தியா  சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. 

நடிகை சந்தியா ஜகர்லமுடி பேசுகையில், “செவ்வந்தி போன்ற அற்புதமான சீரியலில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வினோத், அழகு, ஜெயந்தி நாராயணன் போன்ற சிறந்த நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பை வழங்கியதற்கு இயக்குநர் ஓ.என்.ரத்தினம் அவர்களுக்கு  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக, நான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறந்த நடிப்பை கொடுப்பேன் மற்றும் தொடர்ந்து ஆதரவளிப்பேன்” என்று தெரிவித்தார்.

சந்தியா ஜகர்லமுடியின் முதல் தொலைக்காட்சி தொடர் 'வம்சம்,'. இந்த தொடரை சி.ஜே.பாஸ்கர் இயக்கி தயாரித்தார். இவர் ‘சந்திரலேகா’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அந்த தொடரில், சந்தியா ஜாகர்லமுடி ‘பிருந்தா’ என்ற கேரக்டரில் நடித்து, ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நேரு-காந்தி குடும்பத்தினர் அநீதி இழைத்தனர்: ம.பி. முதல்வர் குற்றச்சாட்டு!

என்ன ஆனது இம்ரான் கானுக்கு? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு!

கடல் பயணம்... கௌரி வினீத்!

ஒவ்வொரு பார்வையிலும் கம்பீரம்... ரூமா சர்மா!

SCROLL FOR NEXT