செய்திகள்

வெளியானது அசோக் செல்வனின் சபா நாயகன் டீசர் 

நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

DIN

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது இவர் நடிப்பில் கடந்தாண்டு பல படங்கள் வெளியானது. சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம். எஸ்டேட் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

தற்போது சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் சபா நாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல், கேப்டன் மேகவான் இசைவானன் ஆகியோர் இணைந்து தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைக்கயுள்ளார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்டேஜ் கார் பேரணி - புகைப்படங்கள்

மோடியின் கொள்கை தொழிலதிபர் நண்பர்களின் நலன்களில் மட்டுமே கவனம்: ஜெய்ராம் ரமேஷ்

தொடங்கியது பிக் பாஸ் 9: முதல் போட்டியாளர் திவாகர் - அரோரா!

விற்பனைக்கு வரும் அகல் விளக்குகள் - புகைப்படங்கள்

உணவு தருவதாகக் கூறி... காரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

SCROLL FOR NEXT