8 நாளில் ரூ.65 கோடி வசூலித்துள்ள விரூபாக்ஷா தமிழ் ரிலீஸ் எப்போது தெரியுமா?
தெலுங்கில் நல்ல வரவேற்பினை பெற்றுவரும் படமான விரூபாக்ஷா தமிழில் வெளியாக உள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் நடிப்பில் மார்ச் 21இல் தெலுங்கில் வெளியான விரூபாக்ஷா திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 8 நாளில் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் சாய் தரம் தேஜ் கதாநாயகனாக நடிக்க சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமாரன் திரைக்கதை எழுதிய இந்தப் படத்தினை கார்த்திக் வர்மா தண்டு இயக்கியுள்ளார். சுகுமார், பிவிஎஸ்என் பிரசாத் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சுனில், பிரமாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழில் ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா வெளியிடுகிறார். மே 5 முதல் தமிழில் வெளியாகுமென அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.