சிகிச்சைக்காக ரூ.25 கோடி வழங்கிய சூப்பர் ஸ்டார்? சமந்தா சொன்ன உண்மை!!
தனது சிகிச்சைக்காக சமந்தா, தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரிடம் பணம் பெற்றதாக வெளியான தகவலை பொய் என உரைக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்.
சிகிச்சைக்காக தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரூ.25 கோடி கொடுத்ததாக எழுந்த வதந்தி குறித்து நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த சில நாள்களாக மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கான சிகிச்சை செலவாக ரூ.25 கோடியை தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் வழங்கியதாக தகவல்கள் பரவின. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகின.
Advertisement
Advertisement
தற்போது இதுகுறித்தும் தான் சிகிச்சை பெற்று வருவது குறித்தும் நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பதிவிட்டுள்ளதாவது, மையோசிடிஸ் சிகிச்சைக்கு ரூ.25 கோடியா? தவறான தகவலை உங்களுக்கு கொடுத்துள்ளனர். அதில் ஒரு சிறிய தொகையை நான் எனக்காக செலவு செய்ததில் மகிழ்ச்சியே. என் சிகிச்சைக்காக நான் மற்றவர்களிடம் பணம் பெறவில்லை. என்னுடைய துறையில் நான் என் வேலைகள் மூலம் அதிக அளவில் சம்பாதித்துள்ளேன். அதனால், என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும். நன்றி.
மயோசிடிஸ் என்பது ஒரு நிலை. அதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் சிகிச்சை தொடர்பாக செய்திகள் வெளியிடும்போது சற்று பொறுப்புடன் இருங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
சமந்தா தனது சிகிச்சைக்காக தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரிடன் பணம் பெற்றதாக வெளியான தகவலை பொய் என உரைக்கும் வகையில் சமந்தா இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.