செய்திகள்

வெளியானது ஜெயிலர் படத்தின் ரத்தமாரே பாடல் 

‘ஜெயிலர்’ படத்தின் ‘ரத்தமாரே’ என்கிற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

DIN

‘ஜெயிலர்’ படத்தின் ‘ரத்தமாரே’ என்கிற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி நடித்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் தற்போதே கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ரத்தமாரே என்கிற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதனை இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக இப்படத்தில் இருந்து முதல் பாடலாக வெளியான காவாலா பாடல் வெளியாகிய 3 வாரங்களில் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பெயரைச் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

SCROLL FOR NEXT