செய்திகள்

ஆண் குழந்தைக்கு தாயான இலியானா!

நடிகை இலியானா தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

DIN

நடிகை இலியானா தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகமான நடிகை இலியானா, தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகர் விஜய்க்கு நண்பன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.

தொடர்ந்து, பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து வரும் இலியானா, கடைசியாக பிக் புல் படத்தில் நடித்திருந்தார். தற்போது அன்ஃபேர் அண்ட் லவ்லி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இலியானா, குழந்தையின் பெயர் 'கோவா ஃபோனிக்ஸ் டோலன்' எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை திருமணம் குறித்த எந்த தகவலையும் பகிராத இலியானா, சில நாள்களுக்கு முன்பு தனது காதலரின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2.5 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல்

அரிக்கன்மேடு பகுதியை புதுவையின் வரலாற்று அடையாளமாக்க கோரிக்கை

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நாளை புதுச்சேரி வருகை: ரூ.436 கோடியில் புதிய மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா்

மாணவா்கள் மீது தாக்குதல்: தேசிய மனித உரிமை ஆணையத்துக்குப் புகாா்

பள்ளியில் மின் மோட்டாா் திருட்டு

SCROLL FOR NEXT