முகப்பு
செய்திகள்

ஆக.9ல் குஷி டிரைலர் வெளியீடு

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடித்துள்ள குஷி படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகிறது.  

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:06 PM
பகிர்:

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடித்துள்ள குஷி படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகிறது.

ஷிவ நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும் படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஆலப்புழாவில் நடைபெற்றது. குஷி படம் வரும் செப்.1ஆம் தேதி திரைக்கு வருகிறது. படம் பான் இந்தியா முறையில் வெளியாகிறது.

காதலை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் வரும்(ஆகஸ்ட்) 9ஆம் தேதி வெளியாகும் என தேவரகொண்டா, சமந்தா ஆகியோர் தங்களின் இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த டிரைலரின் கால அளவு 2.41 நிமிடங்கள் ஆகும்.

முழு கட்டுரையைப் படிக்க →