செய்திகள்

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய கயல்! டிஆர்பியில் மீண்டும் முதலிடம்!!

கடந்த மாதத்தில் கயல் தொடரை பின்னுக்குத்தள்ளி எதிர்நீச்சல் தொடர் முதலிடம் பிடித்திருந்தது.

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரை பின்னுக்குத்தள்ளி, கயல் தொடர் முதலிடம் பிடித்துள்ளது. சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் அதிக புள்ளிகளைப் பெற்று கயல் முதலிடம் வகிக்கிறது. 

கடந்த மாதத்தில் கயல் தொடரை பின்னுக்குத்தள்ளி எதிர்நீச்சல் தொடர் முதலிடம் பிடித்திருந்தது.

சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக பிரைம் டைம் எனப்படும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அதிக அளவிலான ரசிகர்களை ஈர்த்துள்ளது. 

சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலிலும் சன் தொலைக்காட்சியின் தொடர்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. இதன் மூலம் அதிக மக்கள் பார்வையிடும் தொடர்களாக கயல், எதிர்நீச்சல், வானத்தைப்போல, இனியா, மிஸ்டர் மனைவி போன்ற சன் தொலைக்காட்சி தொடர்களே உள்ளன.

அதிலும் குறிப்பாக கயல், எதிர்நீச்சல் தொடர்களிடையே டிஆர்பி பட்டியல் முதலிடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது. பல மாதங்களாக முதலிடத்தில் இருந்த கயல் தொடரை, பின்னுக்குத்தள்ளி கடந்த மாதம் எதிர்நீச்சல் தொடர் முதலிடம் பிடித்தது. எனினும் இந்த வார டிஆர்பி பட்டியலில் கயல் தொடர் 12.48 புள்ளிகளைப் பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

எதிர்நீச்சல் தொடர் 11.55 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 10.09 புள்ளிகளுடன் சுந்தரி தொடரும், 10.05 புள்ளிகளுடன் வானத்தைப் போல தொடரும் உள்ளன. 9.78 டிஆர்பி புள்ளிகளுடன் இனியா தொடர் 5வது இடத்தில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT