செய்திகள்

அயலான் படத்தின் முக்கிய அறிவிப்பு!

அயலான் படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

DIN

அயலான் படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து 3 ஆண்டுகளான கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி (நவ.12) அன்று அயலான் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கனடா எனப் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும், 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த நிலையில், அயலான் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"ADMK - TVK வதந்தி! பாஜகவை கழற்றிவிட அதிமுக தயாரா?": திருமா | செய்திகள்: சில வரிகளில் | 11.10.25

பறவை மோதியதால் தில்லியில் தரையிறங்கிய விமானம்!

சாதனை சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன்; இலங்கைக்கு 254 ரன்கள் இலக்கு!

குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி: சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்துக்கு தில்லி அரசு தடை!

கலைமாமணி விருதுபெற்ற கலைஞர்கள்!

SCROLL FOR NEXT