முகப்பு
செய்திகள்

விரைவில் அயலான் டீசர்!

அயலான் திரைப்படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:07 PM
பகிர்:

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து  கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற தீபாவளி (நவ.12) அன்று அயலான் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும், 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், அயலான் டீசரை படக்குழு தயார் செய்து வருவதாகவும் விரைவில் அதை வெளியிடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →