முகப்பு
செய்திகள்

வெளியானது ஜென்டில் மேன் - 2 அறிவிப்பு விடியோ!

ஜென்டில்மேன் 2 படத்தின் அறிவிப்பு விடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:07 PM
பகிர்:

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ’ஜென்டில் மேன்’ பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜென்டில்மேன் பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

ஜென்டில்மேன் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் இப்பாகத்தை கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் இசையமைப்பாளர் மரகதமணி (எம்.எம்.கீரவாணி) இசையமைக்கிறார்.

முன்னதாக இப்படத்திற்கு சேத்தன் சீனு நாயகனாகவும் நயன்தாரா சக்கரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் நாயகிகளாகவும்   அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →